துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2025 ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் 4 விக்கெற்களால் நியூசிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா.
நாணயச் சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி
50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ஓட்டங்கள் எடுத்தது. டேரில் மிட்செல் அதிகபட்சமாக 63 ஓட்டங்கள் எடுத்தார். வருண் சக்ரவர்த்தி , குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
252 ஓட்டங்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஜோடியான ரோஹித் ஷர்மா , ஷுப்மன் கில் அகியோர் முதல் விக்கெட்டிற்கு 105 ஓட்டங்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.ரோஹித் ஷர்மா 76 ஓட்டங்களுடனும், , , ஷுப்மன் கில் 31 , கோலி இட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.
49வது ஓவர் வரை போராடிய இந்திய அணி இறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்று, இந்த பட்டத்தை அதிகமுறை வென்ற அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.
83 பந்துகளில் 76 ஓட்டங்கள் எடுத்த ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
263 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெற்களை வீழ்த்திய ரச்சின் ரவீந்ரா தொடர் நாயகன் விருது பெற்றார்.