கணேமுல்லே சஞ்சீவ என்ற பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவரைச் சுட்டுக் கொன்ற கொலையாளி, கொலைக்குப் பிறகு கல்பிட்டிக்கு தப்பிச் செல்லும்போது வெளிநாடுகளுக்கு மூன்று அழைப்புகளை மேற்கொண்டதாக கொழும்பு குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
வெளிநாட்டில் வசிக்கும் கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்தா ,அச்சிந்தா என அழைக்கப்படும் மூன்று இலங்கை பாதாள உலக முக்கியஸ்தர்களுடன் பேசியதாக பொலிஸாதெரிவித்தனர்.
மஹரகமவைச் சேர்ந்த சமிந்து தில்ஷான் பியுமாங்க கண்டனாராச்சி என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், 15 மில்லியன் ரூபா ஒப்பந்தக் கொலையை செய்ததாக புலனாய்வாளர்களிடம் கூறியுள்ளார். அவர் கடுவெலவில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார், அங்கு ஒப்பந்ததாரர்களால் போலியான இலங்கை வழக்கறிஞர்கள் சங்க அடையாள அட்டை வழங்கப்பட்டது. கொழும்பிலிருந்து கல்பிட்டிக்கு தப்பிச் செல்வதற்கும், அங்கிருந்து இந்தியாவுக்குச் செல்வதற்கும் வான் ஏற்பாடு செய்திருந்ததாக சிசிடி வட்டாரங்கள் தெரிவித்தன.
சந்தேக நபரின் மொபைல் போன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து பெறப்பட்ட அழைப்பு விவரங்களை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருவதாகவும் பொலிஸ்செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பல பெயர்களைப் பயன்படுத்தியதாக எஸ்எஸ்பி மானதுங்க கூறினார். “சந்தேக நபர் பல மாற்றுப்பெயர்களையும், பல அடையாள அட்டைகளையும் பயன்படுத்தியிருப்பது தெளிவாகிறது. முதலில் அவர் முகமது அஸ்லம் ஷெரிப்தீன் என்றும் பின்னர் சமிந்து தில்ஷான் பியுமாங்க கண்டனாராச்சி என்றும்கூறினார்,” என்று மானதுங்க கூறினார், வழக்கறிஞரின் அடையாள ஆவணத்தைப் பயன்படுத்தும் சந்தேக நபர் கோடிகரகே கசுன் பிரபாத் நிசங்க என்ற பெயரையும் பயன்படுத்தியதாக கூறினார்.