உலக நாடக தினத்தை முன்னிட்டு நாடக ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் நினைவாக சண்டிலிப்பாய் கலாசார மத்திய நிலையத்தினால் உலக நாடக தின விழா சண்டிலிப்பாய் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
இதன் பொழுது குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களது நினைவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி இடம்பெற்றது.
தொடர்ந்து நினைவுரையினை யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் க.ரதிதரன் அவர்கள் நிகழ்த்தினார்.
தொடர்ந்து யாழ் மாவட்டத்தின் பல்வேறுபட்ட அரங்க ஆளுமைகளின் 7 நாடகங்கள் அரங்கேற்றபட்டன.
இதன் பொழுது சண்டிலிப்பாய் கலாசார உத்தியோகத்தர் யாழினி யோகஸ்வரன், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் ,நாடக ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.