சட்டவிரோதமாக வேலை செய்த 600க்கும் மேற்பட்டவர்களை இங்கிலாந்தின் குடிவரவு அமலாக்கக் குழுக்கள் ஜனவரியில் கைது செய்ததாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 352 .இந்த எண்ணிக்கை 73% அதிகமாகும்.
ஆவணமற்ற இடம்பெயர்வை எதிர்த்துப் போராடுவதற்கும், ஆட்கடத்தல் கும்பல்களை முடக்குவதற்கும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் தொழிற்கட்சி அரசாங்கத்தின் பரந்த உத்தியின் ஒரு பகுதியாக இந்த கைதுகள் அதிகரித்துள்ளன.
கடத்தல் நடவடிக்கைகளை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட எல்லைப் பாதுகாப்பு, புகலிடம் மற்றும் குடியேற்ற மசோதா என்ற புதிய மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த சட்டம், கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க சட்ட அமலாக்கப் பிரிவுகளுக்கு “பயங்கரவாத எதிர்ப்பு பாணி அதிகாரங்களை” வழங்க முயல்கிறது.
இந்த மசோதாவின் இரண்டாம் வாசிப்பு திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெறும்.
Trending
- 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 100 க்கும் மேற்பட்ட கைது
- வீதி விபத்தில் 1000க்கும் அதிகமானோர் பலி
- நீரில் மூழ்கும் 20 இடங்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டன
- அரசியல் அதிகாரத்தால் சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டார் – ஜனாதிபதி
- நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி
- அங்கோர் வாட் கோயிலில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- ஜோ பைடனுக்கு புற்று நோய்
- ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை