நேற்றைய தினம் 19 ஆம் திகதியன்று சக்தி விளையாட்டு மைதானத்தில் ஏறாவூர் பற்று பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. சுதாகரன் அவர்களின் வழிகாட்டலில், சக்தி விளையாட்டு கழக தலைவர் றொபட் மற்றும் நாவலர் இளைஞர் கழக தலைவர் அபிலாஸ் அவர்களினதும் தலைமையில் மரநடுகைத்திட்டமும், மைதானமும் அதனை அண்டிய சூழல் துப்பரவு பணிகளும் சிறப்பாக நடைபெற்றன.
Clean Srilanka திட்டத்தின் ஒரு பகுதியாக பிரதேச இளைஞர் சேவை அதிகாரி கிஸ்கந்த முதலி ஜயா அவர்களும், கிராம சேவகர் திரு. உதயன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களான வனஜா அம்மணி அவர்களும், ஜெனிற்றா அம்மணி அவர்களும் கலந்து சிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இம்மரங்களுக்கான பாதுகாப்பு கூண்டுகளுக்கான அனுசரணையினை கழக உறுப்பினர் நிஷாந் (Hello Tell உரிமையாளர் ) வழங்கியிருந்தார்.







நிகழ்வு சிறப்பாக நடைபெற உதவிய தமது கழக உறுப்பினர்களுக்கு சக்தி விளையாட்டு கழகம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.