அமெரிக்காவில் குடியுரிமை பெற வேண்டும் எனில், வர்த்தகம் மிகப்பெரிய வாய்ப்பு. ஆனால், இப்போது இதற்கு பதிலாக கோல்ட் காட் எனும் புதிய திட்டத்தை ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். இது அமெரிக்க குடியுரிமையை விற்க்கும் செயல் என எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்தியப்பணத்தில் ஒரு கோடி முதலீடு செய்து அளவுக்கு குறைந்தபட்சம் 10 அமெரிக்கர்களுக்கு வேலை கொடுத்தால் அமெரிக்க குடியுரிமை கிடைக்கும். ஆனால், இப்போது , ட்ரம்ப் அறிமுகப்படுத்தியிருக்கும் கோல்ட் அட்டை எனும் புதிய திட்டத்தால் இந்தியப்பணத்தில் 145 கோடி செலுத்த வேண்டும்.
ரஷ்யாவின் பெரும் பணக்காரர்கள் (Russian oligarchs) அமெரிக்காவை ஆக்கிரமிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் சிலர் அச்சம் தெரிவித்திருக்கின்றன. 1990களில் சோவியத் உடைந்தபோது, நாட்டின் பெரும் செல்வங்களை பல பணக்காரர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு கைப்பற்றினர். குறிப்பாக எரிசக்தி, கனிம வளங்கள், வங்கிகள், ஊடகம் ஆகியவை முக்கிய நபர்களால் கைப்பற்றப்பட்டது. உக்ரைன் போர் காரணமாக இவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனில் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் ட்ரம்ப்பின் கோல்ட் அட்டை திட்டத்தின் மூலம் இவர்களுக்கான கதவு அமெரிக்காவில் திறக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய பணக்காரர்களில் சிலர் நல்லவர்கள் என்றும் கூட டிரம்ப் பேசியிருக்கிறார்.
மறுபுறம் இதில் சில சட்ட சிக்கல்களும் இருக்கின்றன. ஏற்கெனவே ட்ரம்ப் கொண்டுவந்த பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை மறுக்கும் சட்டத்திற்கு பல நீதிமன்றங்கள் தடையை பிறப்பித்திருக்கின்றன. அதேபோல இந்த திட்டத்திற்கும் நீதிமன்றங்கள் தடை விதிக்க வாய்ப்பு இருக்கிறது. மட்டுமல்லாது கோல்ட் அட்டை திட்டம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு ஆளும் கட்சியின் எம்பிக்களே எதிராக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.