20வது சர்வதேச இரட்டையர் ஆய்வுகள் சங்க (ISTS) மாநாடு,இரட்டையர் கர்ப்பம் குறித்த 8வது உலக மாநாடு நேற்று கொழும்பில் உள்ள சினமன் கிராண்டில் தொடங்கியது.
இரண்டு நாள் நிகழ்வு ஒரு உலகளாவிய அடையாளமாகும், இது இங்கிலாந்து, ஐரோப்பா, அவுஸ்திரேலியா, ஆசியா ,வட அமெரிக்கா முழுவதும் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் , ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அறிவியல் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தும் இந்த மாநாட்டில், மரபியல், மகப்பேறியல், மனநலம், உயிரியல் நெறிமுறைகளில் மருத்துவர்கள் ,பேராசிரியர்கள் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்கிறார்கள், மேலும் மருத்துவம், மனநல மருத்துவம், மரபியல், சமூக உறவுகள் ஆராய்ச்சியில் உலகப் புகழ்பெற்ற நிபுணர்களின் பங்கேற்பு இந்த மாநாட்டின் மதிப்பை மேலும் மேம்படுத்தும். இந்த மாநாடு தெற்காசிய பிராந்தியத்தில் நடைபெறும் மிகப்பெரிய இரட்டையர் மாநாடாகும்.