கொழும்புத் தமிழ்ச் சங்க பிரதான மண்டபத்தில் அமரர் பாரதியின் நினைவு வணக்கக்கூட்டம் எதிர் வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.30 மணிக்கு வீரகேசரி நாளிதழ் – வார இதழ் பிரதம ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன் தலைமையில் நடைபெறும்.
தமிழ் – சிங்கள பத்திரிகைகளின் மூத்த ஆசிரியர்கள், பிராந்திய செய்தியாளர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் இலக்கியத்துறையை சேர்ந்த பலரும் உரையாற்றவுள்ளனர்.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான பாரதி, கொழும்பில் சிங்கள ஊடக அமைப்புகளுடன் இணைந்து 2000 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார். .
35 ஆண்டுகளின் பின்னர் கொழும்பில் இருந்து மீண்டும் யாழ்ப்பாணம் சென்ற பாரதி, தனது சொந்த மண்ணில் மரணிக்கும் வரை வீரகேசரியின் வடபிரபிராந்திய ஆசிரியராக பணியாற்றினார்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை