காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே இன்று போராட்டம் நடைபெற்றது.சுமார் 200 முதல் 300 பேர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில், “எங்களுக்கு பாகிஸ்தான் தேவையில்லை” போன்ற முழக்கங்களும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் கருத்துகளும் தெரிவிக்கப்பட்டன.