கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசல் காரணமாக கடந்த சில வாரங்களாக நெருக்கடி ஏற்பட்டது.தினமும் அண்ணளவாக 300 கொள்கலன்கள் அளவில் முறையாக பரிசோதனை செய்வதற்காக துறைமுகத்தினுள் குறைந்தது மூன்று நாட்களாவது நிறுத்தி வைக்க வேண்டி ஏற்படுவதனால் நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்தது.
க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நியமித்த அமைச்சரவை உப குழுவின் தீர்மானத்திற்கு இணங்க துறைமுகத்திற்கு அண்மையில் உள்ள ப்ளூமெண்டல் நிலப்பகுதியில் ஐந்து ஏக்கரில் 2.5 ஏக்கர் பகுதியை முறையாக உருவாக்கி குறுங்கால தீர்வு ஒன்றாக ஜனவரி மாத இறுதி அளவில் சுங்கத்திற்கு வழங்குவதற்கு கலந்துரையாடப்பட்டது.
மிகவும் குறுகிய காலத்தினுள் விரைவாக தயாரிக்கப்பட்டு முடிக்கப்படக் கூடிய ப்ளூமெண்டல் வளாகத்தில் 2.5 ஏக்கர் அளவிலான பகுதி தற்காலிகமாக கொள்கலன்களின் வெளியாக இன்றுதிங்கட்கிழமை (03) திறக்கப்பட்டது.
Trending
- உடுத்துறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
- ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க டொனால்ட் டிரம்பிற்கு கடிதம்
- உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு – விசேட அறிவிப்பு
- கட்டுநாயக்கா- சீதுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு
- இலங்கையின் மக்கள் தொகை 21.76 மில்லியனை எட்டியுள்ளது
- இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது
- முதலாவது AI-இயங்கும் வன்பொருள் சாதனம்வெளியிடப்பட்டது
- சரிவை சந்திக்கிறது போக்கு வரத்துசபை