குரு வக்ர பெயர்ச்சி: பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர பெயர்ச்சி அடைவதால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப் போகின்றனர். எந்தெந்த ராசிகள் அந்த பலனை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஜீவன காரகன், தன காரகன் என்று போற்றப்படுபவர் குரு பகவான். ஒன்பது கிரகங்களில் சுபகிரகமாக திகழக் கூடியவர் குரு பகவான். மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விதமான செல்வங்களையம் தருபவராக இருப்பவர். குரு பார்க்க கோடி என்று கூறுவது வழக்கம். ஜாதகத்தில் எவ்வளவு பெரிய தோஷங்கள் இருந்தாலும் குரு பார்ப்பதனால் கெடுபலன்கள் குறையும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
குருவின் பார்வை இருந்தால் அனைத்துவிதமான நற்பலன்களும் அந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். பணத்திற்கு அதிபதியானவராக குரு பகவான் திகழ்வதால் தன காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு ராசிக்கும் குரு பகவானின் ஆசிர்வாதம் என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். குழந்தைப் பேறு போன்றவை அளிப்பதால் புத்திர காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலையில் இல்லை என்றால் அவர்களது வாழ்க்கையில் நிறைய பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். அதேசமயம் சாதகமாக இருந்தால் தொட்ட காரியங்கள் துலங்கும். அனைத்து உச்சத்தையும் ஜாதகர் அடைவார். அந்த வகையில், குரு பகவான் பிப்ரவரி 4 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
குரு பகவான் வக்ர பெயர்ச்சியடைவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. எந்தெந்த ராசிக்காரர்கள் என்னவிதமான பலன்களை அடையப் போகிறார்கள் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்..
ரிஷபம்: குரு வக்ர பெயர்ச்சி அடைவதால் ரிஷப ராசிக்காரர்கள் பல்வேறு விதமான நன்மைகளைப் பெறப் போகின்றனர். தொட்ட காரியங்கள் துலங்கும் காலமாக இருக்கும். எடுத்த வேலைகளை உரிய காலத்தில் சிறப்பாக செய்து முடித்து அதில் வெற்றி காண்பீர்கள். இதுவரை இழுபறியாக இருந்து வந்த அனைத்து காரியங்களையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை செய்யும் இடங்களில் உங்களுடைய செயலால் பாராட்டைப் பெறுவீர்கள். உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நன்மைகள் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
மிதுனம்: குருவின் வக்ர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு பண வரவு உண்டாகும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பிப்ரவரி மாதம் முதல் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் காலமாக உங்களுக்கு இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் காண்பீர்கள். தொழில் செய்ய தொடங்குபவர்களுக்கு அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் காலமாக இருக்கும். விரும்பிய விஷயங்கள் அனைத்தும் கைகூடி வரும்.
கும்பம்: குருவின் வக்ர பெயர்ச்சி கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகிறது. பல நன்மைகளையும், சிறப்பான பலன்களையும் அள்ளிக் கொடுக்கும் காலமாக இருக்கும். எந்த துறைக்குள் நுழைந்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். செய்யும் வேலைகளில் அனைத்திலும் உங்களை முன்னிலைப்படுத்திக் காட்டிக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும். செய்யும் வேலைகளில் பலமடங்கு லாபங்களைப் பெறுவீர்கள். சேமிப்பு மற்றும் முதலீடுகளில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகம், வியாபாரம், தொழிலில் சிறந்து விளங்குவதற்கான சூழல் உருவாகும்.