அஜித் நடித்த குட் பேட் அக்லி படத் தயாரிப்பாளருக்கு இசைஞானி இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதால் 5 கோடி ரூபா இழப்பீடு கேட்டு இஐயராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தனது அனுமதியின்றி தனது பாடல்களைப் பயன்படுத்தியதற்காக 5 கோடி ரூபா நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். 7 நாட்களில் எழுத்துப்பூர்வ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். பாடல்களை நீக்க வேண்டும் மறுஉருவாக்கம் செய்து பயன்படுத்திய அந்த பாடல்களை நீக்க வேண்டும். தான் இசையமைத்த பாடல்களை தடுக்கும் விதமாக மறுஉருவாக்க பாடல்கள் அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜா இசையமைத்த நாட்டுப்புற பாட்டு எனும் படத்தில் இடம்பெற்ற ஒத்த ரூபாயும் தாரேன் என்ற பாடலும் விக்ரம் படத்தில் என் ஜோடி மஞ்சக்குருவி பாடலும், சகலகலா வல்லவன் படத்தில் இடம் பெற்ற இளமை இதோ இதோ உள்ளிட்ட ரெட்ரோ பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு பாடலுக்கு ராயல்டி கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதே போல் கூலி திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் கடந்த ஆண்டு வெளியானது. கூலி டீசர் அதில் ரஜினி நடித்த தங்கமகன் படத்தில் வாவா பக்கம் வா பாடலின் டிஸ்கோ இசை பயன்படுத்தப்பட்டிருந்தது. இதை தனது அனுமதியின்றி சன் பிக்சர்ஸ் பயன்படுத்தியதற்காக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
Trending
- பண்டிகைக் கால விபத்துக்கள் – 80 பேர் வைத்தியசாலையில் அனுமதி
- குட் பேட் அக்லி தயாரிப்பாளரிடம் 5 கோடி ரூபா கேட்கிறார் இளையராஜா
- யாழில் தென்னை மரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு
- ட்ரம்பை எதிர்த்ததால் 2.2 பில்லியன் டொலர் இழப்பு
- அமெரிக்காவில் நிலநடுக்கம்
- சுழிபுரத்தில் புதுவருட விளையாட்டும் மாணவர் கௌரவிப்பும்
- முன்னாள் அமைச்சர் கைதாவார் சுமந்திரன்
- நல்லூரில் புது வருடப் பிறப்பு