கிளிநொச்சியில் சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பளை பகுதியில் இன்று (09) சனிக்கிழமை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமஷ்டி தீர்வை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 100 நாள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்தின் அடிப்படையிலேயே ஒன்பதாவது நாள் போராட்டமாக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
