வெளிநாட்டு லீக்குகளில் பங்கேற்க விரும்பும் தேசிய கிறிக்கெற் வீரர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து தடையில்லா சான்றிதழ்களையும் (NOCs) பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) நிறுத்தி வைத்துள்ளது, ஏனெனில் எதிர்கால ஒப்புதல்களை வீரர்களின் செயல்திறனுடன் இணைக்கும் ஒரு புதிய உத்தியை அது இறுதி செய்து வருகிறது.
பாகிஸ்தான் அணியின் தலைமை இயக்க அதிகாரி சுமைர் அகமது சையத் வெளியிட்ட அறிவிப்பில், வெளிநாட்டு லீக்குகள் , போட்டிகளில் பங்கேற்பதற்கான அனைத்து என்ஓசிகளும் உடனடியாகவும், மறு உத்தரவு வரும் வரையிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
டிசம்பரில் தொடங்கவுள்ள பிபிஎல் 15 க்கு பாபர், ரிஸ்வான் , ஷாஹீன் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இடைநீக்கம், பாபர் அசாம், ஷாஹீன் ஷா அப்ரிடி, முகமது ரிஸ்வான், ஹாரிஸ் ரவூஃப், ஷதாப் கான், ஃபஹீம் அஷ்ரஃப் உள்ளிட்ட பல முன்னணி வீரர்களைப் பாதிக்கிறது, இவர்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் (பிபிஎல்) விளையாட அனுமதி வழங்கப்பட்டது
எதிர்காலத்தில் செயல்திறன் அடிப்படையிலான NOCகள் வழங்கப்படும் என்றும், சர்வதேச, உள்நாட்டு கிரிக்கெட்டில் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை பூர்த்தி செய்யும் வீரர்கள் மட்டுமே வெளிநாட்டு லீக்குகளில் விளையாட தகுதி பெறுவார்கள் என்றும் பாகிஸ்தான் கிறிக்கெற்வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.