காஸா பகுதி முழுவதும் கடந்த சனிக்கிழமை சுமார் 100 இலக்குகளை விமானப்படை தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியது.
இலக்குகளில் நிலத்தடி உள்கட்டமைப்பு தளங்கள், ஆயுத சேமிப்பு வசதிகள், போராளிக் குழுக்கள் ஆகியவை அடங்கும் என்றும் அது கூறியது.
அதே நேரத்தில், காசா நகரில் ஐ.டி.எஃப் தரைப்படைகள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தின, சுரங்கப்பாதைகள், குண்டுவீச்சு கட்டடங்கள், ஹமாஸ் செயல்பாட்டு தளங்கள் , துப்பாக்கி சுடும் நிலைகள் போன்ற இராணுவ உள்கட்டமைப்பை அகற்றின என்று அறிக்கை கூறுகிறது.
துருப்புக்கள் அந்தப் பகுதியில் ஹமாஸின் இராணுவப் பிரிவைச் சேர்ந்த ஆயுதங்களைக் கண்டுபிடித்து, போராளிகளைக் கொன்றதாகவும் அது மேலும் கூறியது.
இஸ்ரேலிய தாக்குதல்களால் கடந்த 24 மணி நேரத்தில் காஸா பகுதியில் குறைந்தது 34 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 200 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீனத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான WAFA சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.