காரைநகர் பிரதேச சபை தேர்தலில் மான் சின்னம் அனைத்து வட்டாரங்களிலும் வெற்றிபெறும் என காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் மத்தியகுழு உறுப்பினரும் முன்னாள் யாழ்மாநகர சபை மேயருமான சட்டத்தரணி மணிவண்ணனுடன் இணைந்து காரைநகர் பிரதேச சபைக்கான வேட்புமனுவை கையளித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திர பேசுகையில்,
காரைநகர் மண்ணை நேசிப்பவர்கள் நிச்சயமாக என்னை நேசிப்பார்கள் நான் தவிசாளராக இருந்த அந்த இறுதி 7 மாதங்களை நினைத்துப்பார்ப்பார்கள்.
அந்த நேரத்தில் நான் முழுநேர அரசியலில் ஈடுபட்டு பல அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டேன். நான் எமது பிரதேச அபிவிருத்திக்காக கொழும்பு வரை சென்று உயர்மட்ட அமைச்சர்களைக் கூட சந்தித்தேன் வெற்றியும் கண்டேன்.
என்னைப் பொறுத்தவரை எமது காரை மண்ணின் அபிவிருத்தியே எனது இலக்கு. இங்கு சின்னங்கள் முக்கியமில்லை. சின்னங்கள் மாறினாலும் எனது எண்ணங்கள் மாறாது. தமிழ் மக்கள் கூட்டணியில் பலமான அணியொன்று இம்முறை களமிறக்கப்பட்டுள்ளது என்றார்.