ஆப்னாகிஸ்தானின் நங்கர்ஹார் ,கோஸ்ட் ஆகிய மாகாணங்களில் புதன்கிழமை இரவு பாகிஸ்தான் ட்ரோன்கள் வீடுகளைத் தாக்கியதில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், , ஏழு பேர் காயமடைந்ததாகவும் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து எதிர்ப்புத் தெரிவிகப்பட்டதாகவும் ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானை ஒட்டியுள்ள தென்கிழக்கு எல்லைப் பகுதியான கோஸ்டின் ஸ்பெரா மாவட்டத்தில், ஹாஜி நயீம் கானின் வீட்டின் மீது ட்ரோன்கள் தாக்கியதில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர் , பலர் காயமடைந்தனர் என்று மாகாண ஊடகத் தலைவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானின் கிழக்கு எல்லையான பாகிஸ்தானுக்கு அருகிலுள்ள நங்கர்ஹாரின் ஷின்வார் மாவட்டத்தில், ஷாசவர் என்ற நபரின் வீடு இடிந்து விழுந்ததில் காயமடைந்தவர்களில் நான்கு மகன்களும் இரண்டு மனைவிகளும் அடங்குவர் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் மோசமாகி உள்ளன.