ஸ்பெய்னில் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள காட்டுத்தீயை அணைக்க மேலும் 500 வீரர்களை அனுப்பியுள்ளது – மொத்த துருப்புக்களின் எண்ணிக்கையை 1,900 ஆக உயர்த்தியுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 158,000 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் கருகிவிட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய காட்டுத் தீ தகவல் அமைப்பு தெரிவித்துள்ளது – இது இலண்டனின் பெருநகரப் பகுதியைப் போன்றது – கடந்த வாரத்தில் மூன்று பேர் இறந்துள்ளனர்.
ஸ்பெயினின் வடமேற்குப் பகுதியான கலீசியாவில் பல உட்பட மொத்தம் 20 பெரிய காட்டுத்தீகள் எரிந்து கொண்டிருக்கின்றன . சில ஒன்று சேர்ந்து ஒரு பெரிய தீயாக மாறி, வீதிகள், ரயில் சேவைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஸ்பானிஷ் அதிகாரிகளுக்கு உதவி செய்யும் பிரான்ஸ் , இத்தாலியின் விமானங்களுடன் நெதர்லாந்தில் இருந்து இரண்டு நீர் குவிக்கும் விமானங்கள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பிற நாடுகளைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களும் வரும் நாட்களில் வருவார்கள் என்று சிவில் பாதுகாப்பு முகமைத் தலைவர் வர்ஜீனியா பார்கோன்ஸ் பொது ஒளிபரப்பாளரான RTVE இடம் தெரிவித்தார்.