Tuesday, February 18, 2025 9:55 am
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை 22 ஆம் திகதி சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு நாகபட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும்.
www.sailsubham.com என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பயணச்சீட்டுகளை பதிவு செய்ய முடியும். இந்த கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் நடைபெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

