Sunday, September 28, 2025 7:55 am
கரூரில் நடந்த தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ. 2 லட்சம் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய்யின் கூட்டம் நடைபெற்றது. இதில் வரலாறு காணாத வகையில் மிகப் பெரிய அளவில் பல ஆயிரம் பேர் கூடியிருந்தனர். விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே கூட்டத்தில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டது. விஜய் பேசி முடித்த நிலையில் மிகப் பெரிய அளவில் நெரிசல் ஏற்பட்டது. இதில் 39 பேர் அநியாயமாக உயிரிழந்தனர்.11 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50,000 நிதியுதவியும் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

