2025 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டி நடக்கும் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் இந்திய தேசியக் கொடி காணப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுவதால் இந்தியக் கொடி ஏற்றப்படவில்லை என பாகிஸ்தான் விளக்க்கமளித்துள்ளது. போட்டி நடைபெறும் நாட்களில் நாட்களில் நான்கு கொடிகளை மட்டுமே காட்சிப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விளக்கம் அளித்துள்ளது.
ஐசிசி கொடி, போட்டியை நடத்தும் நாடாக பாகிஸ்தானின் கொடி போட்டியிடும் இரண்டு அணிகளின் கொடிகள் இதில் இடம்பெற்றுள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.