மூத்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 87.
கன்னட திரைப்படத்தில் அறிமுகமான சரோஜா தேவி தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றவர். அதை தொடர்ந்து, தமிழில் 1958ம் ஆண்டு எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தில் அறிமுகம் ஆனார். அடுத்து இயக்குநர் ஸ்ரீதரின் கல்யாணபரிசு படத்தில் 1959ல் நடித்தார்.
அடுத்தடுத்து அப்போதைய தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக இருந்த நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனுடன் பிஸியாக நடித்த நடிகையென்றால் அது சரோஜா தேவிதான்.
பார்த்திபன்கனவு, அன்பேவா, ஆசைமுகம், ஆலயமணி , கல்யாணபரிசு, எங்கள் வீட்டுப்பிள்ளை என அடுத்தடுத்து சரோஜா தேவி நடித்த படங்கள் அனைத்தும் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.
எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு கனகச்சிதமாக பொருந்த கூடியவர் சரோஜா தேவி. மேலும் தனது திறமை மிக்க நடிப்பால் கொடுக்கப்படும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பவர்.
எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு கனகச்சிதமாக பொருந்த கூடியவர் சரோஜா தேவி. மேலும் தனது திறமை மிக்க நடிப்பால் கொடுக்கப்படும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பவர்.
சரோஜா தேவியின் கோபால் வசனமும், லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பாடலும் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று என்றே கூறலாம். ஒரு நாளில் 18 மணி நேரம் நடிப்பாராம் சரோஜா தேவி.
சரோஜா
இப்போது ஒரு படத்தில் கமிட்டாகி அதை முடித்துவிட்டு அடுத்த படத்தில் கமிட்டாகி நடிக்கிறார்கள். அப்போதே நடிகை சரோஜா தேவி 30 படங்களில் கமிட்டாகி அடுத்தடுத்து பிஸியாக நடித்து வந்த நடிகையாம்.
இப்போது ஒரு படத்தில் கமிட்டாகி அதை முடித்துவிட்டு அடுத்த படத்தில் கமிட்டாகி நடிக்கிறார்கள். அப்போதே நடிகை சரோஜா தேவி 30 படங்களில் கமிட்டாகி அடுத்தடுத்து பிஸியாக நடித்து வந்த நடிகையாம்.
அப்போது உச்சநட்சத்திரங்களான சிவாஜி மற்றும் எம்ஜியாருடன் அதிக பாடங்களில் நடித்த நடிகை இவர். காலையில் சிவாஜியுடனும் மாலையில் எம்ஜியாருடனும் நடிப்பாராம் சரோஜா தேவி. இதில் எம்ஜியாருடன் 26 படங்களிலும், சிவாஜியுடன் 22 படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை சரோஜா தேவி இந்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் பல அரசு விருதுகளும் அள்ளிக்குவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி என மொத்தம் 200 படங்களில் நடித்துள்ளார் சரோஜா தேவி. கடைசியாக 2009-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘ஆதவன்’ படத்தில் நடித்தார். இந்நிலையில் பெங்களூருவில் உடல்நலக்குறைவால் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார்.