உள்ளூர் நுகர்வோருக்கு சூதாட்ட விடுதிகளை அரசாங்கம் ஊக்குவிக்காது என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்திருந்தார்.
இலங்கையில் சூதாட்ட விடுதிகள் செயல்பாடுகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பில் புதிதாகத் திறக்கப்பட்ட “கனவுகளின் நகரம்” (City of Dreams) போன்ற இடங்கள் முக்கியமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கானவை என அவர் தெரிவித்தார்.
“உள்ளூர்வாசிகளுக்கு சூதாட்ட விடுதிகளில் நுழைவதைத் தடுக்கும் தெளிவான விதிமுறைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இலங்கையை ஒரு சிறந்த சுற்றுலா தளமாக நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்துகிறது” என ருவான் ரணசிங்க தெரிவித்திருந்தார்.