கனடாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இலாப நோக்கற்ற அமைப்பை டொரண்டோவில் ஆரம்பித்துளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குவதன் மூலமும் கிராமப்புற வறுமையை ஒழிப்பதன் மூலமும் உதவுவதே இதன் நோக்கமாகும்.
சர்வதேச மனித நிவாரண கனடா (IHRC) ஐ.எச்.ஆர்.சி தலைவர் ஷிராஸ் மொஹிதீன் தலைமையில் நடைபெற்ற விழாவில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அமைப்பு ஏற்கனவே இலங்கையில் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது. கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு 25 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது என ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.