கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் நேற்றைய (24) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து அவரது உறவினருடன் யாழ்ப்பாணம் வந்திருந்தார். யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த வேளை நேற்று உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் அவரது வீட்டுக்கு சென்ற உறவினர் அவர் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாராருக்கு தகவல் வழங்கினார்.
அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
Trending
- அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீவைப்பு பிரதமர் ராஜினாமா
- பத்திரிகைப் பேரவைச் சட்டத்தில் திருத்தம்
- ஜனாதிபதி வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலத்தின் விவாதம் நாளை
- ஜனாதிபதி வரப்பிரசாதம் சட்டமூல இரத்து தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்
- இலங்கைக்கு ஆதரவாக 43 நாடுகள் வெளியுறவு அமைச்சு அறிவிப்பு
- நேபாளத்தில் சமூக ஊடகத் தடை நீக்கப்பட்டது
- அரபிக்கடலில் மிகப்பெரிய எரிவாயு கண்டுபிடிப்பு
- 460 மில்லியன் ரூபா மோசடி செய்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்