இன்று கனடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை .25 % ஆல் குறைத்துள்ளது. அமரிக்க தேர்தல் முடிவுகளின் பின்னர் நடைபெறும் முதலாவது வட்டி வீத குறைப்பு இதுவாகும். ஏற்கனவே கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 5 முறை வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது வட்டி வீதம் 3.0 ஆக உள்ளது.
கனடிய இறக்குமதிகள் மீதான 25 வீத வரிவிதிப்பு பற்றிய அமரிக்க அதிபரின் தொடர் அச்சுறுத்தலின் மத்தியில் இந்த வட்டிவீத குறைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
அமரிக்காவுடனான வர்த்தகப் பிணக்குகள், கனடிய பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் என மத்திய வங்கி ஆளுனர் குறிப்பிட்டார்.