கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்ததில் இருந்து இன்று வரையான காலப்பகுதியில் லிபரல் கட்சியின் தலைமைப் பதவியும் கனேடிய பிரதமராகும் வாய்ப்பும் உள்ள முன்னணி வேட்பாளர்களின் விபரங்கள் வெளியாகி வருகின்றன.
இவர்களில் மார்க் கானி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் ஆவார். இவருக்கு பல லிபரல் அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இவர்களில் பூர்வீகக் குடிகள் உறவுகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு அபிவிருத்திக்கான கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி அவர்களும் அடங்குவார்.
மற்றைய முன்னணி வேட்பாளராக முன்னாள் நிதி அமைச்சர் கிறிஸ்ரியா பிறீ லான்ட் களம் இறங்குகிறார் இவருக்கும் சில அமைச்சர்கள் ஆதரவு நல்கியுள்ளனர்.
மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தலைமைத்துவ போட்டியில் கனேடிய பிரதமர் யார் என்பது தெரிந்துவிடும்.