கந்தானையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருட்கள், ஐஸ் அல்லது மெத்தம்பெட்டமைன் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவை குறித்த ஆய்வறிக்கையை இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், கைப்பற்றப்பட்ட இரசாயனப் பொருட்களின் ஆய்வக சோதனைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
மித்தெனிய மற்றும் தங்காலையில் உள்ள நெடோல்பிட்டிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டவை, ஐஸ் எனக் கூறப்படும் மெத்தம்பெட்டமைன் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை உறுதிப்படுத்தியது.
வெலிகம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மிகவும் ஆபத்தான போதைப்பொருள் என உறுதிப்படுத்தப்பட்டதாக அந்த சபை குறிப்பிட்டிருந்தது.
இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட் குற்றக்குழு உறுப்பினர்களால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில், மித்தெனிய, தங்காலை பகுதிகளிலிருந்து ஐஸ் போதை பொருள் எனச் சந்தேகிக்கப்படும் இரசாயனப்பொருட்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன.
கண்டுப்பிடிக்கப்பட்ட இரசாயன மாதிரிகள் ஆய்வக பகுப்பாய்வுக்காக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைக்கு அனுப்பட்டுள்ளன.