வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற கோரி தமிழரசு கட்சியினால் , பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் , சில இடங்களில் கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்ட நிலையில், பெருமளவான இடங்களில் இயல்பு நிலையே காணப்பட்டது.
காலை சில இடங்களில் கடைகள் பூட்டப்பட்டு இருந்தாலும் , பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தமையை அவதானிக்க முடிந்தது.
அதேவேளை போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கி வருவதுடன், அரச திணைக்களங்கள் , பாடசாலைகள் என்பனவும் வழமை போன்று இயங்கி வருகின்றன