கண்டி பெரஹெர நிகழ்வில் பங்கேற்பதற்காக யானையுடன் கண்டிக்கு வருகை தந்திருந்த யானைப்பாகனின் உதவியாளர் ஒருவர் இன்று (31) காலை கண்டி குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கண்டி கதிர்காம தேவாலயத்தில் நடைபெறும் பெரஹெர நிகழ்வில் பங்கேற்க அரநாயக்க பகுதியில் இருந்து வந்திருந்தார். அவர் யானை பாகன் ஒருவரின் உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். உயிரிழந்த நபர் 28 வயதான அச்சலங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.