கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் தங்கத்தை கடத்த முயன்றதற்காக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று துபாயிலிருந்து வந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
210 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 6.7 கிலோ தங்கத்தை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
கிராண்ட்பாஸைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரும, கண்டியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் வாகன உதிரி பாகங்களுக்கு இடையில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தனர்.
சோதனையின் போது, சுங்க அதிகாரிகள் தங்கக் கையிருப்பைக் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.