கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஹீனடியன பகுதியைச்சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் இத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை 5:35 மணியளவில் காயமடைந்தவரது வீட்டிற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் அவர் தனது தந்தையுடன் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த வேளை இத்துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டது.
சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்த இளைஞர் முதலில் மினுவாங்கொட அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.