மன்னார் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவு ஒரு காலத்தில் பிரமாண்டமாக இருந்தது. 1969ல் 20.85 ஹெக்டேராக இருந்தது. ஆனால் 2018ல் 5.97 ஹெக்டேராக சுருங்கியது. நிபுணர்களின் கூற்றுப்படி, கரியாச்சல்லி , கசுவாரி தீவுகள் 2035க்குள் மூழ்கிவிடுமாம். இந்நிலையில் கரியாச்சல்லி தீவை காப்பாற்றும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கி உள்ளது 50 கோடி ரூபாவில் புனரமைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்திருக்கிறது.
தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு இயக்கத்தின் சார்பில் உலக வங்கி கடனுதவியுடன் ₹1,675 கோடியில் கடலோர மேம்பாட்டு புதிய திட்டங்களை கடந்த 2024 ஆம் ஆண்டில் தமிழக அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக கரியாச்சல்லி தீவை காப்பாற்றும் முயற்சியில் தமிழக அரசு இறங்கி உள்ளது.
முன்னதாக இதேபோல் சிக்கலை எதிர்கொண்ட வான் தீவு வெற்றிகரமாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அங்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான கடலடிப்பவளப்பாறைகள் பரப்பை அதிகரித்து, சுற்றியுள்ள நீரை ஆழமற்றதாக்கி, வண்டல் குவிப்பை அதிகரித்திருந்தது. இதனால் அங்கு 37-க்கும் அதிகமான துணை மற்றும் பெரிய பவளப்பாறைகளில் வாழும் கடல்வாழ் இனங்கள் பெருகின.
Trending
- உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பரிசுத் தொகை அறிவிப்பு
- ஐபிஎல் இல் தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி
- நீரஜ் சோப்ராவுக்கு கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி
- இலங்கை எல்லைக்குள் மீன் பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – இந்திய சட்டத்தரணி சிவஞானசம்பந்தம்
- இலங்கை வரலாற்றில் நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
- கடலில் மூழ்கப்போகிறது மன்னார் வளைகுடாவில் உள்ள கரியாச்சல்லி தீவு
- விசாரணைக் குழு முன் ஆஜராகிறார் தேசபந்து தென்னகோன்
- 500,000 ஏக்கர் தென்னை நிலங்களை புதுப்பிக்க திட்டம்