Wednesday, June 18, 2025 10:34 am
கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரி எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்க தனது கடமையை இன்று புதனிகிழமை (18) பொறுப்பேற்றார்.
அமைச்சின் உதவிச் செயலாளர் எஸ்.கரன், சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்கள மாகாண ஆணையாளர் திருமதி றிஸ்வானி றிபாஸ் அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.எம்.றியாஸ் ஆகியோர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

