இந்தியாவின் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஓகஸ்ட் நடுப்பகுதியில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கிறிக்கெற் தொடர் ஒன்றை நடத்துவதற்கான கலந்துரையாடல் நடைபெறுகிறது.
ஜூலை ஓகஸ்டில் நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) ஒத்திவைப்பு, இலங்கைக்கான சாதகத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் செய்யப்படவில்லை என்றாலும், இரு நாடுகளும் ஒரு குறுகிய இருதரப்பு தொடரின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன – ஒருவேளை மூன்று ஒருநாள் ,மூன்றுரிடி20 போட்டிகளைக் கொண்டதாக இருக்கலாம்.
இந்த ஆண்டு இந்தியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய முதலில் திட்டமிடப்படவில்லை,பங்களாதேஷுடன் விளையாடத் திட்டமிடப்பட்டது. அது இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கை ஓகஸ்ட் மாத இறுதியில் ஸிம்பாப்வேக்கு புறப்பட உள்ளது, அங்கு தொடர் ஓகஸ்ட் 29 ஆம் திகதி தொடங்குகிறது. இதன் விளைவாக ஓகஸ்ட் நடுப்பகுதி மட்டுமே இந்தியாவை நடத்துவதற்கு சாத்தியமான காலமாகும்.
Trending
- பழங்குடியின மக்களுக்கு 78 ஆண்டுகளின் பின் மின்சாரம்!
- கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா!
- வீரபத்திராசனம்
- 20 ஆவது இலக்கத்துக்கு ஓய்வு
- எரிபொருள் துண்டிக்கப்பட்டதால் விமானம் விழுந்தது
- ராஜித சேனாரத்னவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு
- இலங்கையும் ரஷ்யாவும் ஆழமான நட்புறவு நாடுகள்
- ஊடகங்களிடம் இருந்து ரூ. 500 மில்லியன் கோருகிறார் ஹரக் கட்டாவின் மனைவி