Friday, June 20, 2025 6:50 am
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை வழிநடத்தும் முதல் பெண்மணி ,முதல் ஆப்பிரிக்கர் என்ற பெருமையைப் கிறிஸ்டி கோவென்ட்ரி.
கிரேக்கத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 144வது ஐஓசி அமர்வின் கிறிஸ்டி கோவென்ட்ரி தலவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 23 ஆம் திகதி கடமையைப் பொறுப்பேற்பார். 2013 ஆம் ஆண்டு முதல் தலைவராக இருக்கும் முதல் அமைப்பை வழிநடத்தி வரும் தோமஸ் பாக்கின் பதவிக்காலம் முடிகிறது.
வென்ட்ரியின் ஒலிம்பிக்குடனான ஆழமான உறவு உள்ளவர். 2000 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் பங்கு பற்றினார். தொடர்ச்சியாக ஐந்து ஒலிம்பிக் போட்டிகலில் பங்குபற்றிய கோவென்ட்ரி இரண்டு தங்கங்கள் உட்பட ஏழு பதக்கங்களை வென்றுள்ளார்.
கோவென்ட்ரி விளையாட்டு நிர்வாகத்திலும் பெரும் பங்காற்றியுள்ளார். 2013 இல் ஐ.ஓ.சி.யில் தடகள உறுப்பினராக சேர்ந்தார், தடகள ஆணையத்திற்கு தலைமை தாங்கினார், நிர்வாகக் குழுவில் பணியாற்றினார், ஸிபாப்வேயில் கிர்ஸ்டி கோவென்ட்ரி அகாடமி, ஹீரோஸ் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான விளையாட்டு சூழல்களை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார்.
அவர் 2018 முதல் ஜிம்பாப்வேயின் இளைஞர், விளையாட்டு, கலை மற்றும் பொழுதுபோக்கு அமைச்சராகவும் பணியாற்றினார், இதன் போது விளையாட்டில் மேட்ச் பிக்சிங், துஷ்பிரயோகம் , பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சட்டத்தை இயற்றினார்.இரண்டு இளம் மகள்களின் தாயாக தனது வீட்டு வாழ்க்கையுடன் தனது புதிய பங்கை சமநிலைப்படுத்துவது ஒரு சவாலாக இருந்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

