கனடிய இறக்குமதிகள் மீதான அமெரிக்க அரசின் 25 வீத வரிவிதிப்பின் எதிரொலியாக, கனடாவின் ஒன்ராறியோ மாநில முதல்வர் டக் போர்ட் அவர்களின் அறிக்கை வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் பெறுமதியான அமெரிக்க மதுபானங்கள் விற்பனையாகின்றன. வருகின்ற செவ்வாய் கிழமை முதல் இவை விற்பனை நிலையங்களில் இருந்து அகற்றப்படும் எனவும், கனடிய உற்பத்திகளை தெரிவு செய்ய இது சரியான தருணம் என்றும் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.