நான்கு நாடுகளுக்கு இடையிலான ஹாக்கி இறுதிப் போட்டியில் கனடா , அமெரிக்காவை 3-2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டியது.
போட்டி 2-2 என சமநிலையில் இருந்து, வெற்றிக்கான கோல் மேலதிக நேரத்தில் கனடிய அணியால் போடப்பட்டது.
‘இந்த வெற்றி கனடாவுக்கு மிகவும் தேவையானது, கனடிய வீரர்கள் தீவிரமாக விளையாடி வென்றார்கள்’ என கனேடிய பயிற்சியாளர் குறிப்பிட்டார்.
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அண்மைய செய்திகளின் பின்னணியில் இந்த வெற்றியை கனேடியர்கள் கொண்டாடுகிறார்கள்.
பிரதமர் ஜெஸ்டின் ரூடோ தமது எக்ஸ் தளத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
‘உங்களால் எங்கள் நாட்டை எடுத்துக் கொள்ள முடியாது, உங்களால் எங்கள் விளையாட்டை எடுத்துக் கொள்ள முடியாது’