எல்ல – வெல்லவாய வீதியில் 24ஆவது மைல்கல் அருகில் நேற்று (05) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இறந்தவர்களில் 9 பெண்களும் 6 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
11 ஆண்களும் 7 பெண்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 05 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற பஸ் 200 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய பஸ் தங்காலை நகரசபை பணியாளர்கள் குழுவை ஏற்றிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸார், இராணுவம், விமானப்படை, தீயணைப்புத் திணைக்களம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து விபத்தில் சிக்கியவர்ளை மீட்டனர்.
விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸில் 30இற்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், பஸ் விபத்து நடந்த இடத்தில் இருந்த மோசமான நிலைமைகள் காரணமாக, அந்தக் குழுவை மீட்க பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
Trending
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”
- பாகிஸ்தானில் நிலநடுக்கம், தேசங்கள் இல்லை. மக்கள் வெளியேற்றம்.
- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது நினைவு தினம் அனுஸ்டிப்பு