கச்சதீவின் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடர்படையினர் தெரிவித்தனர். மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களையும், கைப்பற்றப்பட்ட படகையும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.