கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க்கின் தந்தையான எரோல் மஸ்க், தனது ஐந்து குழந்தைகள் , வளர்ப்பு குழந்தைகள் ஆகியோரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் 1993 ஆம் ஆண்டுக்கு முந்தையவை என்று செப்டம்பர் 23 ஆம் திகதி தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எரோல் தற்போது வசிக்கும் கலிபோர்னியாவிலும், தென்னாப்பிரிக்காவிலும் இந்த துஷ்பிரயோகம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
நீதிமன்ற பதிவுகளின்படி, குற்றச்சாட்டுகள் குறித்து மூன்று தனித்தனி பொலிஸ் விசாரணைகள் தொடங்கப்பட்டன.இரண்டு வழக்குகள் நடவடிக்கை இல்லாமல் மூடப்பட்டாலும், மூன்றாவது விசாரணையில் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.இந்தக் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், எரோல் எந்த குற்றங்களுக்கும் தண்டனை பெறவில்லை.அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து, அவற்றை “பொய் மற்றும் முட்டாள்தனம்” என்றார்.
“குழந்தைகளை பொய்யான விஷயங்களைச் சொல்ல வைப்பதன் மூலம்” எலானிடமிருந்து பணம் பறிக்க குடும்ப உறுப்பினர்கள் இந்தக் கூற்றுக்களை ஜோடித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
தனது தந்தை மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எலான் பகிரங்கமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.இருப்பினும், கடந்த காலங்களில் எரோலுடனான தனது கடினமான உறவைப் பற்றி அவர் பேசியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு ரோலிங் ஸ்டோன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், எலான் தனது தந்தை “நீங்கள் நினைக்கும் கிட்டத்தட்ட எல்லா தீய காரியங்களையும்” செய்ததாகக் கூறினார்.