Friday, February 14, 2025 10:00 am
அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் கலாநிதி ஜெயக்குமார் குமாரசுவாமி (கவிஞர் பாரதி பாலன்) எழுதிய திருவாதவூரர் மாணிக்கவாசகர்தம் “எந்நாட்டவர்க்கும் இறைவன்” நூல் அறிமுக விழா சனிக்கிழமை (15) திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக தீபகாந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
கிழக்கு மாகாணம் ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.சிறப்பு விருந்தினர்களாக திருகோணமலை ஸ்ரீ பத்ர காளியம்மாள் தேவஸ்தான
பிரம்மஸ்ரீ சோ.ரவிச்சந்திர குருக்கள் , திருகோணமலை மறைமாவட்டம் ஆயர், ஆண்டகை பேரருட்திரு நோயேல் இம்மானுவேல் ,சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவம், இலங்கை, கிழக்கு பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் அ.அ.நவரெத்தினம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கும் இவ்விழாவில் சல்லியம்பாள் மகா வித்தியாலய மாணவர்களின்
வரவேற்பு நடனமும் இடம்பெறவுள்ளது.
வரவேற்பு உரையை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின்
தலைவர் கனக தீபகாந்தனும், நூல் அறிமுக உரையை திருமதி சௌ.சந்திரகலாவும் நிகழ்த்தவுள்ளனர்.

