ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக திருமதி பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று(28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.
இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான திருமதி பீ.ஏ.ஜீ பெர்னாண்டோ, இதற்கு முன்னர் மேல் மாகாணக் கல்வி, கலாசார மற்றும் கலை நடவடிக்கைகள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
Trending
- கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
- கர்ப்பிணிகளுக்கு உணவுப் பொதிகள் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ்
- வவுனியாவில் உணவகங்களில் உள்ள புகைத்தல் பகுதிகளுக்கு தடை
- 72 பேரைக் கைது செய்வதற்கு சிவப்பு அறிவிப்பு – அமைச்சர் ஆனந்த விஜேபால
- ‘பாலஸ்தீனம் என்ற நாடு இருக்காது’ எச்சரிக்கிறது இஸ்ரேல்
- சார்லி கிர்க்கின் படுகொலை சந்தேக நபரின் படங்கள் வெளியீடு
- சஷீந்திர ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
- உக்ரைனுக்கு இளவரசர் ஹரி திடீர் விஜயம்