ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், திங்கட்கிழமை (14) கூடிய வாராந்த அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
1954 ஆம் ஆண்டின் 19 இலக்க கடை அலுவலக ஊழியர்களின் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் மூலம் கடை அலுவலக ஊழியர்களின் சேவை வசதிகள், சேவைக்காலம், மேலதிகநேர கொடுப்பனவு மற்றும் விடுமுறை தொடர்பான ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சட்டத்துக்கமைய தொழில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு ஏற்புடைய ஒழுங்குவிதிகளை வெளியிடுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அமுலிலுள்ள ஒழுங்குவிதிகளின் கீழ் 18 வயதுபூர்த்தியடைந்த ஒரு பெண் ஊழியர் தங்குமிட ஹோட்டலில் வரவேற்பு அலுவலரின், பெண்கள் அங்கி அறை ஊழியரின், பெண்களின் ஆடை அறை ஊழியரிகளின் அல்லது பெண்களின் மலசலகூட ஊழியரின் கருமங்களில் பிற்பகல் 6.00 மணிக்கு பின்னர் மற்றும் முற்பகல் 6.00 மணிக்கு முன்னர் சேவையில் ஈடுபடுத்தப்படலாம். வதிவிட ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பணியில் ஈடுபட்டுள்ள உணவு மற்றும் பானங்களை வழங்கும் பெண் ஊழியர்கள் இரவு 10.00 மணிவரை மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்படலாம் என்பதனால், குறித்த நடவடிக்கை செயற்பாடுகளை பேணும் போது பல்வேறு சிக்கல் நிலை தோன்றலாம் என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய,தங்குமிட ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பணியில் ஈடுபட்டுள்ள உணவு மற்றும் பானங்களை வழங்கும் கருமங்களில் ஈடுபடும் 18 வயதுக்கு கூடுதலான பெண் ஊழியர்கள் பிற்பகல் 6.00 மணிக்குப் பின்னரும், முற்பகல் 6.00 மணிக்கு முன்னரும் பணியில் ஈடுபடக்கூடிய வகையில் 1954 ஆம் ஆண்டின் 19 இலக்க கடைஅலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 3 ஆவது ஒழுங்குவிதியை திருத்தம் செய்வதற்காக தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Trending
- நாட்டில் 24 மணிநேரத்தில் வாகன விபத்துக்களில் 6 பேர் பலி
- கைதானவர்களை அழைத்துவர இந்தோனேசியா சென்ற விசேட பொலிஸ் குழு
- செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்
- வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தினம் : யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி
- சாவகச்சேரியில் இடித்து அகற்றப்பட்ட சுமைதாங்கி
- ஈட்டி எறிதலில் லெகாம்கேவிற்கு தங்கம்
- பருத்தித்துறை பிரதேச சபை ஏல்லைக்குள் பொலித்தீனுக்குத் தடை
- காபூலில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு