ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
ஊழலுக்கு எதிரான போராட்டம் உலகின் ஒவ்வொரு நாட்டின் கலாசாரத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும். போதைப்பொருள் ,அவற்றுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் இன்று உலகின் புதிய பிரச்சினையாக மாறிவிட்டது என்றார்.
பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் கூறினார்.