சர்வதேச உள நல தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஏற்பாடு செய்த யினரால் உள நல விழிப்புணர்வு நடை பவனி இன்று காலை 7:30 மணியளவில் நெல்லியடி மாலை சந்தையிலிருந்து ஆரம்பமாக மந்திகை சந்தி, சிலையடி சந்தி, ஊடாக சரசாலை வீதி , மந்திகை சந்தை வழியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்றது
யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நடை பவனியை தொடக்கிவைத்தார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பதில் மருத்துவ அத்தியட்சகர் தலமையில் இடம் பெற்ற இந்த நடைபவனியில் பருத்தித்துறை நகரபிதா வின்சன் டிபோல் டக்ளஸ் போல், பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விசேட மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், , உத்தியோகத்தர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். AIA காப்புறுதி, ஆப்பிக்கோ ஆகியன நிறுவனங்கள் அனுசரணை வழங்கியிருந்தன.
