உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17,ஆம் திகதி முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
28 நகர சபைகள், 36 நகர சபைகள் , 272 பிரதேச சபைகள் அடங்கலாக 336 உள்ளூராட்சி சபைக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கல்முனை மாநகர சபை, தெஹியத்தகண்டிய பிரதேச சபை (அம்பாறை மாவட்டம்), மன்னார் பிரதேச சபை (மன்னார் மாவட்டம்), பூனகரி பிரதேச சபை (கிளிநொச்சி மாவட்டம்) , எல்பிட்டிய பிரதேச சபை (காலி மாவட்டம்) ஆகியவை இந்தத் தேர்தலில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.
வேட்பாளரிடமிருந்து பாதுகாப்பு வைப்புத்தொகை மார்ச் 3 முதல் மார்ச் 19, வரை நண்பகல் 12.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். மார்ச் 13, போயா தினம் , வார இறுதி நாட்கள் மார்ச் 8, 9, 15 ,16 ஆகிய திகதிகளைத் தவிர ஏனைய நாட்களில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.