2025 ஆம் ஆண்டுக்கான 72ஆவது உலக அழகி போட்டி இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள HITEX கன்வென்ஷன் சென்டரில் நேற்று இரவு இடம்பெற்றது.
இப் போட்டியில் மிஸ் வேர்ல்ட் 2025′ கிரீடத்தை வெல்லும் நோக்கில் பல நாடுகளிலுமிருந்தும் 100க்கும் மேற்பட்ட அழகு ராணிகள் போட்டியிட்டனர்.
இப் போட்டி நேற்று இரவு நிறைவடைந்த நிலையில் உலக அழகிக்கான பட்டத்தை தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி வென்றார்.
இது மதிப்புமிக்க சர்வதேச போட்டியில் தாய்லாந்துக்கு கிடைத்த முதல் வரலாற்று வெற்றியாகும்.
இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள HITEX கண்காட்சி மையத்தில் 31 மே 2025 அன்று முடிசூட்டு விழா நடைபெற்றது.
அங்கு அவருக்கு செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா முடிசூட்டினார்.