உத்திர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்லும் வழியில் 300 கிலோமீற்றர் வரை நீண்டு வாகனங்கள் அணிவகுத்து சென்று உலகின் நீண்ட போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) பிரயாக்ராஜ் நோக்கி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வாகனங்களை நிறுத்தி பொலிசார் போக்குவரத்தை தடை செய்தனர்.
உலகின் மிகப்பெரிய மதக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் தங்கள் கார்களில் வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் நெரிசலில் சிக்கித்தவித்தனர்.