உலகின் மிகவும் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2008 முதல் ஐஸ்லாந்து முதலிடத்தில் தொடர்கிறது.
பொருளாதாரம், அமைதி நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய உலகளாவிய அமைதி குறியீட்டின்படி, ஐஸ்லாந்தைத் தொடர்ந்து அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரியா , சுவிட்சர்லாந்து ஆகியவை உள்ளன.
இந்த நாடுகள் சமூக பாதுகாப்பு, வரையறுக்கப்பட்ட இராணுவமயமாக்கல் , தொடர்ச்சியான மோதல்கள் இல்லாதது ஆகியவற்றில் தொடர்ந்து அதிக மதிப்பெண் பெறுகின்றன. பொதுவாக வலுவான நிர்வாகம், சமூக நம்பிக்கை மற்றும் நிறுவன ரீதியான மீள்தன்மை காரணமாக என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில், மூன்றாம் தரப்பு தரவுத்தொகுப்புகளில் உலகளாவிய அமைதி குறியீட்டு மதிப்பெண் அடையாளம் காணப்பட்ட நிலையில், இலங்கை 163 நாடுகளில் 97ஆவது இடத்தில் உள்ளது. முந்தைய ஆண்டை விட நாடு இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.
தெற்காசியாவில் பூட்டான் ,நேபாளத்திற்குப் பிறகு மூன்றாவது அமைதியான நாடாக இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
2025 GPI, கடந்த 17 ஆண்டுகளில் 13ஆவது முறையாக உலகம் அமைதியற்றதாக மாறியுள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது, நாட்டின் அமைதியின் சராசரி நிலை முந்தைய ஆண்டை விட 0.36 சதவீதம் மோசமடைந்துள்ளது.